close

இலுப்பைத்தோப்பு | (page 4 of 6)

home

இலுப்பைத்தோப்பு

துளிர்...தளிர்...இலை...சருகு...

iluppaithoppu.blogspot.com

"ஜீன காஞ்சி"-சமண காஞ்சி -திருப்பருத்திகுன்றம் ,காஞ்சி.

                                                   
திருப்பருத்திகுன்றம் ,காஞ்சிபுரத்தில் உள்ளது.இப்பகுதி "ஜீன காஞ்சி"-சமண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

மற்ற இந்து கோயில் போன்ற கட்டிட அமைப்பை கொண்டிருக்கிறது.
சமண மதத்தை தோற்று வித்த மகாவீரரின் உருவச்சிலை கருவறையில் வீற்றிருக்கிறது.மேலும் சுற்றிலும் மற்ற தீர்த்தங்கரர்கள் சிலை உள்ளது.இந்திய தொல்லியல்  துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இப்பகுதியில் வாழும் சில சமண மதத்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் இங்கு வந்து செல்கின்றனர்.

                                 
கோயிலின் மேற் கூரையில் சமண மத,தத்துவ விளக்கங்களும்,குறியீடுகளும் வரையப்பட்டு உள்ளன.மிக எளிமையாகவும்,ஆழமான பொருள் பொதிந்த தலமாக  விளங்குகிறது.பூனைகள் குறுக்கிடும் பூசை அறைகளும்,ஒரு விளக்கு மட்டும் ஒளி பாய்ச்சும் அறைகளும் அழகு.
அலங்காரமும்,பட்டு துணிகளும் மாலைகளும் போர்த்தி,பசனைகள் முழங்கும் இந்து வழிபாட்டில் இருந்து விலகி,ஆடை இல்லாத,அலங்காரம்,அணி மணிகள் இல்லாத 
விட்டு விடுதலையாகிய நிருவான நிலையில் நிலை கொண்டுள்ளார் மகாவீரர்.
                           
சிலையின் சில பகுதிகள் உடைந்து பின்பு வடிவமைக்கப்பட்டு உள்ளது.ஓவியங்கள் புதிததாக வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்க்கிறது.
வைதீக மதத்திற்கு மாற்றாக வந்த மகாவீரரை காண இங்கே செல்லலாம்.பின்புறத்தில் பழைய மரம் ஒன்று உள்ளது.அது பல நூற்றாண்டு கடந்த ஒன்றாக இருக்கக்கூடும்,அதன் அடி மரத்தில் இருந்து கிளைத்து விரியும் இளங்கிளைகள் மரமாகி நிற்கின்றது.

                                  காஞ்சி என்றால்,காமாட்சி,பட்டு,இட்லி மட்டுமில்லாது ,சமணம்,புத்தம், மகாவீரர் என்று காஞ்சி வேறு ஒரு காட்சி அளிக்கிறது."தச்சூர்.திரு மூக்கன் அய்யா அவர்கள். 'நாங்கூர் காடு'காவலர்.திட்டக்குடி வட்டம்,கடலூர் மாவட்டம்

                                                         


"கொஞ்சம் ஆடுங்க இருக்கு மேய்ச்சலுக்கு,அக்கம் பக்கம் நிலத்த காவல் காக்க சொல்லுவாங்க,இங்க அடிக்கடி காட்டு பன்றி ,மானுங்க எல்லாம் வரத்து உண்டு.அப்பப்ப கூலி வேலையக்கு போறது உண்டு,இப்ப வயசாயிட்ட தால முடியறது இல்லை.
மத்த படி,இங்க யாராவது மரம் வெட்டுனா,ஆடு மாடு மேய்ச்சால்,நான் புகார் சொல்வது உண்டு. அவர்களுக்கு அவதராம் (தண்டனை தொகை ) விதிப்பது உண்டு.அப்ப பாத்து ஆபிசருங்க எதாவது கொடுப்பாங்க ....
இது தாங்க என் வருமானம்,வாழ்க்கை எல்லாம் என்கிறார்."தச்சூர் திரு மூக்கன் அய்யா அவர்கள். 

                               

இவர் ,அய்யா.திரு.மூக்கன்.தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர்.இது கடலூர் மாவட்டம்.சென்னை-திருச்சி நெடுஞ்சாலை,NH-45,திட்டக்குடி வட்டம்,இராமநத்தம்(தொழுதூர்),மேற்கில் உள்ளது.இங்கு நாங்கூர் எனும் கிராமத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதி உள்ளது.இது 'நாங்கூர் காடு' என்று அழைக்கப்பட்டு வருகிறது.இந்த காட்டை தான் இந்த மூக்கன் 
என்பவர் காவல் காத்து வருகிறார்.இது அரசு பணியும் அல்ல.இவர் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பணியை செய்கிறார்.படிப்பு இல்லாத காரணத்தால் தன்னை நிரந்தரம் செய்ய வில்லை என்கிறார்.

                           (மழை நேரத்தில் ஒதுங்கி காவலிருக்கும் குடிசை).

இவருக்கு காவலுக்கு நிரந்தர மாத ஊதியமாக எதுவும் கிடையாது.மேற்படி எப்பாவது யாராவது வேட்டையாடி அல்லது மரம் வெட்டி பிடிபட்டால் மட்டுமே அரசு சன்மானமாக தருவது உண்டு.வருமானம் இல்லாத போது எப்படி இதை தொடர்கிறிர்கள் என்றால்..'வர்ற ஆபிசருங்க பாத்துக்க சொல்றாங்க' நாமும் பழகிட்டோம்.
இதுவே புடிச்சி போச்சி.இனி வேற எந்த வேலைக்கு போகறது என்கிறார்.
                               

        
                                  (கிளா க்காய்)மக்களும் இவரையே ஏற்று கொண்டு விட்டார்கள்.இவரது பேச்சுக்கு கட்டுப்படவும் செய்கிறார்கள்.இந்த காட்டில் உள்ள அனைத்து வகையான மரங்கள்,செடிகள்,விலங்குகள் அனைத்தும் இவரது அறிவு களஞ்சியம்.இதன் வனத்துறை காவலருக்கு கூட தெரியுமா என்பது ஐயமே.இந்த சித்திரை மாதம் போட்ட பனை கொட்டைகள் முளைத்து கன்றுகளாக வந்து உள்ளது.அதை பெருமிதமாக நம்மிடையே அழைத்து காட்டுகிறார்.நமக்கும் பெருமிதமாக உள்ளது.
                                                            (ஆவாரம் பூ )
எந்த ஒரு பெரிய எதிர் பார்ப்பும் இல்லாமல்,மனிதர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் திரு.மூக்கன் போன்ற சிலர்.
இவர்களால் தான் வானம் மண்ணில் இன்னும் மழை பெய்கிறது.ஆம் இவர் போன்ற நல்ல உள்ளங்களுக்க்காகவும்,இவர் காக்கும் காடுகளுக்காகவும்.

                                              

நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............

நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............
                      
                                                
 
என்ன பெத்த ராசா 
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா....

பேரா...
பவுனு,காசுன்னு எதுவும் வேண்டாம் 
பாடைய நிறைக்க பூவு மட்டும் போதும் 

பட்டு புடவையும்,பட்டணத்து சேலையும் வேண்டாம் 
எம் பாடைய மறைக்க பார்டர் வச்ச சேலை போதும்

பக்கத்து ஊரு மேளம் வேண்டாம் 
ஊரை கூட்டும் ஒப்பாரியும் வேண்டாம் 
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............எந் தலை மாட்டுல கொஞ்சம் நேரம் நின்னா போதும் 


எம் பேரா..
வேட்டுச் சத்தமும்,வெட்டிச் செலவும் வேண்டாம் 
இருக்கும் போதே இரைச்சல் இல்லை 
இறந்த பின்னே சத்தம் எதுக்கு 

யாரு வராவிட்டாலும் பரவாயில்லை 
பேரா.. நீ
காரு ஏறி வந்து விடு...

பேரு சொல்ல பேரன் இருக்கான்னு ஊரு சொல்ல 
எந்த தேசம் போயிருந்தாலும்,எட்டி வந்து விடு ...

என் கட்டையா புதைக்கும் வரை 
கிட்டயே இருந்து விடு ..

பேரா..
பழைய துணியில முடிஞ்ச சேதி ஒன்னு 
அடுக்கலயில காத்திருக்கும் 
அப்புறமா திறந்து பாரு.............
எம் பேரா..
நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா...


நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா..............
                                    
                                             

"இறந்தோருக்கு பசுமையில் ஒரு தாசு மகால்" . இவர்களே மனிதர்கள்.


                                                     


சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை,NH-45 இராமநத்தம்(தொழுதூர்) இல் இருந்து கிழக்காக  செல்லும் பாதையில் இருக்கிறது அரங்கூர் எனும் கிராமம்.
இங்கே திரு.அருச்சுனன் என்பவர்,கடந்த மூன்று ஆண்டு காலமாக ஓர் அரிய பணியை செய்து வருகின்றார்.முன்பு மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரதுனு,தற்போது மாவட்ட ஆட்சியராக  உள்ள வரும் இவரை நேரில் வந்து பணியை பாராட்டி சென்றனர். 

                                                                                             
இறந்தோரை புதைக்கும் இடுகாட்டை,ஒரு சோலை வனமாக மாற்றி பராமரித்து வருகிறார்.பல்வேறு வகையான பழ மரங்கள் காய்த்து உள்ளது.பல வண்ண பூக்கள் அங்கே பூத்து அழகு செய்கின்றது.பார்ப்பவர் எவருக்கும் அது இடுகாடு என்ற எண்ணம் வருவதில்லை.
பெண்களும்,குழந்தைகளும் வராத சுடுகாட்டிற்கு பழம் பறிக்கவும்,பூக்கள் சேகரிக்கவும் வருகிறார்கள்.

                                                       
தனது குடும்பத்திடம் தனது வருமானம் முழுக்க 'நந்தவன பணிக்காக' செலவு செய்ய ஒப்புதல் பெற்று வரும்,இவர் ஒரு உழவு வேலை செய்யும் உழைப்பாளி.
செல்வம் படைத்தவர் அல்லர்.இதில் விளையும் வாழை போன்றவை விற்று வரும் வருமானத்தை ஊர் நிர்வாகத்திடம் கொடுத்து விடுகிறார்.இதற்கு தண்ணீர் பாய்ச்சும் செலவை இவர் சொந்த செலவில் செய்கிறார்.எவரிடமும் பணம் பெறுவதில்லை.
                                       
                                         
இவரை பற்றி ஜூனியர் விகடனில் செய்தி வந்தது.10/09/2011(வடக்கு மண்டலம்)
அதையும் அவர் அறிந்திருக்கவில்லை.
தன்னை பற்றி ஒரு செய்தி வந்திருப்பது கூட அறிந்திடாத மனிதர்கள் செயலை மட்டுமே செய்கிறார்கள்,மற்றோர் செய்திகளை மட்டுமே செய்கிறோம்.

அங்கே புதைக்கப்படும் உடல்கள் வரிசையாக இடப்படுகின்றன.வேறு இட நெருக்கடி இல்லை.
                               
ஷாஜகான் தன் மனைவி ஒருத்திக்காக ஒரு தாஜ்மகல் கட்டினார்.இந்த ஏழைகள் உறங்கும் இந்த மண்ணில் ஒரு ஏழையால் ஒரு பூஞ்செடியோ,ஒரு மரக்கன்றோ தானே நட முடியும்.அதை செய்து காட்டியதில் இந்த 'அரங்கூர் அர்ச்சுனன்' மா மன்னனாகவே திகழ்கிறார்.
                                            

சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''

சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''

                                              


இன்று மாலை 4 மணி ......

 அளவில்,./20/08/2011. காரி கிழமை
சமச்சீர் கல்விக்காக தொடக்க நிலை முதல்,இறுதி வரை ஆக்கபூர்வமான வழியில் போராடி,


நீதிக்கான முதல் படியை தொட முதன்மையானவர் .''பிரின்ஸ் கசேந்திர பாபு'' அவர்கள்.
சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''


                            

அவருக்கு நன்றி பாராட்டும், சமச்சீர் கல்வி 
குறித்த  எதிர்கால திட்ட முன்னடுப்புகள் 
 கூட்டமும் 
நடைபெற்றது.

சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''


"திருக்குறள் மணி"  இறைக்குருவனார் தலைமையேற்றார்.மா.பூங்குன்றன் .புலவர் அருகோ .(எழுகதிர் ஆசிரியர்).சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''
                                                        


இதனுடன் வழக்குரையாளர்கள்,கல்வியாளர்கள் பலரும் கலந்து கொண்டு எதிர்கால திட்ட முன்னடுப்புகள் குறித்து கருத்துகள் வழங்கினர்.                                   

சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''
                                                              


தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....

தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....
தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....
                  

தமிழகத்தில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்வழி தனியார் பள்ளி இது.சென்னையின் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் அமைந்திருக்கிறது.
நீண்ட நாள் வேட்கையின் விளைவாக நேரில் சென்றோம்.ஆலமர நிறுத்தத்தில் அருகில் அமைந்திருக்கிறது.
தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....
                 
பொன்னிறத்தில் வள்ளுவர் வாயிலில் மின்னுகிறார்.
தலைமை ஆசிரியை நம்மை வரவேற்று,நம்மோடு உரையாடுகிறார்.
அவர் சொல்ல சொல்ல நமக்கு வியப்பு மேலிடுகிறது.அப்பள்ளியில் பணிபுரியும் அனைவரும் பெண்கள்.
ஒன்பதாவது வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது.அப்பள்ளியில் (L.K.G)மொட்டு,(U.K.G)பிஞ்சு என்று அழகாக பெயரிட்டு உள்ளனர்.
மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 175 க்குள் தான் இருக்கும்.மாணவர்கள் எல்லோரும் ''வணக்கம் அய்யா''...என்று குரலேடுப்பது மிகவும் மழலையாகவும்,மாண்பாகவும் இருக்கின்றது.மிகவும் குறைந்த கட்டணமே வாங்கப்படுகிறது.இப்பள்ளியில் படிக்க வைப்பதற்காகவே, 
இப்பகுதிக்கு குடி பெயர்ந்த உணர்வாளர்களும் உண்டு.
இதில் பணி செய்யும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அப்பள்ளியிலே படிக்கிறார்கள்.
அந்த ஆசிரியர்களும் மிக மிக குறைந்த கட்டணத்திலேயே பணி புரிகின்றனர்.மாணவர்கள் எல்லோரும் ஆசிரியர்களை ''அத்தை'' என்றே அன்போடு அழைக்கிறார்கள்.

தமிழ் வழிப் பள்ளிகளுக்கு இலவயமாக பாடப்புத்தகங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணை உள்ளது.ஆனால் சமச்சீர் நூல் இதுவரை உண்டு,இல்லை அல்லது என்று வரவேண்டும் என்று கூட சொல்லாமல் இழுத்து,அலை கழித்து வருவதாக வருத்தமுற்றர்கள்.
சமச்சீர் கல்விக்கு முன்னோடி பள்ளியை பார்த்த மகிழ்வில் விடைபெற்றோம்.
தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....
                                   

                                

ஓவியக் கவிதை மரபு - Thanks to DINAMANI.27/07/2011.


ஓவியக் கவிதை மரபு -  Thanks to DINAMANI.27/07/2011.தமிழின் கவிதை மரபு 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்தது. கவிஞர்கள் காப்பியங்களை கவிதை மரபில் உருவாக்கியதால், கம்பர் போன்ற கவிஞர்களை மன்னர்களுக்கு இணையாக கவிச் சக்கரவர்த்தி என்று அழைத்து மக்கள் கொண்டாடினர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற சமயக் குரவர்களால் பதிகம் பெற்றும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார் போன்றோரால் பாசுரம் பெற்றும் பெருமை வாய்ந்த கோயில்கள் இன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.

இந்தக் கவிதை மரபில் இசை, பாடல், கீர்த்தனை, திரைப்படப் பாடல்கள் போன்ற எண்ணற்ற வகைகள் இருந்தாலும், தமிழர்களிடையே கவிதை மரபு ஓவியக் கவிதைகளாக இருப்பதைத்தான் அனைவரும் வரவேற்கின்றனர். இதுகுறித்து கலை விமர்சகரும், இலக்கிய இயக்கத்தின் நிறுவனருமான கலை விமர்சகர் தேனுகா கூறியது:

கவிதை மரபில் பல காப்பியங்கள் உருவாகியுள்ளன. கவிதை என்பது எழுத்துப் பிரதியாகவும், வாய்மொழிப் பிரதியாகவுமே இன்றளவும் காணப்படுகிறது.
கவிதை ஓவிய வடிவிலான கவிதையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் மாற்றி எழுதப்பட்டுள்ளது. தமிழறிஞர் உ.வே.சா. இக் கவிதை ஓலைச் சுவடிகளை மிகச் சிரமப்பட்டு தேடி சேகரித்து தமிழுக்கு பெருமை சேர்த்தார்.


திருமங்கையாழ்வார், திருஞானசம்பந்தர் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என்னும் ஓவியக் கவிதைகள் ஒன்றிலிருந்து தொடங்கி ஏழு வரை முடிந்து, மீண்டும் ஏழிலிருந்து தொடங்கி ஒன்றில் முடியும் விசித்திரமான தேர் வடிவில் அமைக்கப்பட்ட ஓவியக் கவிதைகளாகும்.திருமங்கையாழ்வார் எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் அமைந்துள்ளது. சுவாமிமலையில் முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருவெழுக்கூற்றிருக்கையை இக் கோயிலில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பார்த்து வருகின்றனர். நான்கும் நான்குமாக எட்டு பாம்புகள் பிணைந்தது போன்ற வடிவில் அமைக்கப்பட்ட அஷ்ட நாக பந்தம், அழகிய தமிழ் ஓவியக் கவிதையாகும். முரசு போன்ற அமைப்பில் உள்ள முரச பந்தம், மயில் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட மயூர பந்தம், மாலை மாற்றிக்கொள்வதைப் போல எழுதப்பட்ட மாலை மாற்று போன்ற ஓவியக் கவிதை மரபு தமிழரின் கவிதைக்கு பெருமை சேர்க்கக் கூடியதாகும்.


தமிழின் எண்ணற்ற கவிதை மரபில் ஓவியக் கவிதை மரபை இன்றும் குழந்தைகள்கூட கண்டு ரசிப்பதுடன், இதுபோன்ற ஓவியக் கவிதைகளை அவர்களும் எழுதி விடவும் முடியும்.

கவிதைக்கான நோபல் பரிசு பெற்ற எஸ்ரா பெüண்ட் ஆங்கிலத்திலும், இந்தியாவில் தாகூர் வங்க மொழியிலும் ஓவியக் கவிதைகளை எழுதியுள்ளனர். சிறிய ஓடை ஓடுவது போன்ற வடிவில் ரஷிய மொழியில் மாயகாவ்ஸ்கியும், பிரெஞ்சு மொழியில் ஃபார்க், சீன மொழியில் லூசூன், போன்றோர் சித்திரக் கவி எனப்படும் ஓவியக் கவிதைகளை எழுதி கவிதை உலகுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.உலகின் பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் உள்ள இலக்கியத் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழக அரசின் தமிழ்த் துறை பேராசிரியர்கள், முனைவர் பட்டம் பெறும் மாணவர்கள் உலகளாவிய ஓவியக் கவிதை மரபை தமிழ் மரபோடு ஒப்பிட்டு ஆவணப்படுத்த வேண்டும்' என்றார் தேனுகா.
பூங்காக்​கள் என்​றாலே அவற்​றில் பூக்​கள்,​​ செடி​கள்,​​ கொடி​கள்,​​ மரங்​கள் என்று உயி​ருள்ள தாவ​ரங்​கள்​தாம் இருக்​கும்.​ பெரம்​ப​லூ​ருக்கு அருகே சாத்​த​னூர் கிரா​மத்​தில் "தேசிய கல்​ம​ரப் பூங்கா' நம்​மைத் திகைக்க வைக்​கி​றது.​ கல்​லில் மரங்​களா?​ என்று சற்று வியப்​பு​டன் விழி​களை உயர்த்​திப் பார்க்​கி​றோம்.​ ​ ​ ​சாத்​த​னூர் கிரா​மத்​தில் 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் தோன்​றிய மரம் ஒன்று புவி​யின் தோற்ற வர​லா​ற்றுக்குச் சான்​று​கூ​றும் தட​ய​மாக இப்​போது படுத்​தி​ருக்​கி​றது.​ ​
இப்​போது இந்த ஊருக்கு கிழக்கே 100 கிலோ மீட்​டர் தொலை​வில் கடல் அமைந்​துள்​ளது.​
ஆனால் 12 கோடி ஆண்​டு​க​ளுக்கு முன் இவ்​வூ​ரின் மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்​டர் வரை கடல் பர​வி​யி​ருந்​த​தா​கப் புவி​யி​யல் ஆய்​வு​கள் கூறு​கின்​றன.​ புவி​யி​யல் வர​லாற்​றின்​படி இக்​கா​லம் "கிரி​டே​சஸ் காலம்' என்று அழைக்​கப்​ப​டு​கி​றது.​ இக்​கா​லத்​தில் இன்று இருப்​பது போன்று கட​லில் பல்​வேறு உயி​ரி​னங்​கள் வாழ்ந்​தி​ருக்​கின்​றன.​
இவ்​வி​லங்​கு​கள் இறந்த பின்பு ஆறு​க​ளி​னால் அடித்​து​வ​ரப்​பட்ட மணல்,​​ களி​மண் இவற்​றால் மூடப்​பட்டு கட​லின் அடி​யில் அமிழ்ந்​தன.​ கட​லோ​ரப் பகு​தி​யி​லும் அதன் அரு​கி​லும் தழைத்து வந்த மரங்​க​ளும் ஆற்று வெள்​ளத்​தி​னால் அடித்​து​வ​ரப்​பட்டு இவ்​வி​லங்​கு​க​ளு​டன் கட​லில் அமிழ்ந்​தன.​ காலப்​போக்​கில் வெப்​பம்,​​ அழுத்​தம் ஆகி​ய​வற்​றால் பசு​ம​ரங்​கள் கல்​ம​ரங்​க​ளாக உரு​மா​றின.​
இவ்​வூ​ரில் காணப்​ப​டும் கல்​லு​ரு​வா​கிய பெரிய அடி​ம​ரம் ஏறத்​தாழ 10 கோடி ஆண்​டு​க​ளுக்கு முந்​தைய திருச்​சி​ராப்​பள்ளி பாறை​யி​னப் பகு​தி​யில் அமைந்​தி​ருக்​கின்​றது.​ இது "கோனி​பெ​ரஸ்' வகை​யைச் சார்ந்​த​தா​கக் கரு​தப்​ப​டு​கி​றது.​
இம்​ம​ரம் 18 மீட்​டர் நீள​மு​டை​யது.​ ​ சாத்​த​னூ​ருக்கு அரு​கில் வர​கூர்,​​ ஆனைப்​பாடி,​​ ​ அலுந்​த​ளிப்பு,​​ சார​தா​மங்​க​லம் ஆகிய ஊர்​க​ளின் அருகே நீரோ​டைப்​ப​கு​தி​க​ளி​லும் சில மீட்​டர் நீள​முள்ள கல்​ம​ரங்​கள் காணப்​ப​டு​கின்​றன.​
இந்​திய புவி​யி​யல் துறை​யைச் சார்ந்த டாக்​டர் எம்.எஸ்.கிருஷ்​ணன் அவர்​க​ளால் 1940-ம் ஆண்​டில் இக்​கல்​ம​ரங்​கள் பற்​றிய செய்தி முத​லில் தெரி​விக்​கப்​பட்​டது.​ ​
புவி​யி​யல் தோற்​றத்​தின் வர​லாற்று கல்​வெட்​டா​கக் காணக்​கி​டைக்​கும் இக்​கல்​ம​ரங்​கள் பற்றி "மழை மண் மரம் மானு​டம்' என்ற அமைப்​பின் மூலம் சமத்​துவ சமூ​கச் சுற்​றுச்​சூ​ழ​லுக்​கான செயல்​பாட்​டா​ள​ரான கட​லூர் மாவட்​டம்,​​ இரா​ம​நத்​தம் கிரா​மத்​தைச் சேர்ந்த இர​மேசு கருப்​பை​யா​வி​டம் கேட்ட போது அவர் நம்​மி​டம் பகிர்ந்து கொண்​டவை:​
""இந்​தக் கல்​ம​ரங்​க​ளைப் போன்றே திண்​டி​வ​னத்​துக்கு அருகே திரு​வக்​க​ரைப் பகு​தி​யி​லும் கல்​ம​ரங்​கள் காணப்​ப​டு​கின்​றன.​ இது​போன்ற கல்​ம​ரங்​கள் பல இடங்​க​ளில் கிடைத்​தா​லும் தொடர்ச்​சி​யாக 18 மீட்​டர் நீளம்​கொண்ட அடி​ம​ரம் இது என்​பது சிறப்பு.​ ​ இதன் அரு​கில் முன்பு நடப்​பட்ட ஒரு புளி​ய​ம​ரத்​தின் வேர் இக்​கல்​ம​ரத்​தின் தொடர்ச்​சிக்கு இடை​யூ​றாக அமைந்து கல்​ம​ரத்​தைத் துண்​டாக்கி நிற்​கி​றது.​ இடை​யூ​றான இந்த மரத்தை அங்​கி​ருந்து அகற்ற வேண்​டும்.​ ​
இக்​கல்​ம​ரம் திறந்த வெளி​யில் இருப்​ப​தால் வெயி​லி​லும்,​​ மழை​யி​லும் பாதிக்​கப்​பட்டு சிறு​துண்​டு​க​ளா​கச் சிதை​வு​றும் வாய்ப்பு இருக்​கி​றது.​ ​
எனவே இந்த வர​லாற்​றுச் சின்​னத்​தைப் பேணிக் காக்க மேற்​கூரை ஒன்றை நிறு​வுவது அவ​சி​யம்.​ வரும் பார்​வை​யா​ளர்​கள் தொட்​டுப் பார்ப்​ப​தை​யும்,​​ அதன் மீது ஏறி நடக்​கா​மல் இருக்​க​வும் அதைக் கண்​ணா​டிப் பெட்​டிக்​குள் வைத்​துப் பாது​காக்க வேண்​டும்.​
இதைப் புவி​யி​யல் அறி​வும்,​​ அனு​ப​வ​மும் கொண்​ட​வர்​க​ளைக் கொண்டு பரா​ம​ரிக்க வேண்​டும்.​ இது​கு​றித்து விளக்​கம் அளிக்க சரி​யான ஒரு​வர் இல்​லா​த​தால் வரு​கின்ற உள்​நாட்டு,​​ வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​கள்,​ ஆய்​வா​ளர்​கள்,​​ மாண​வர்​க​ளுக்குப் பல அரிய செய்​தி​களை உணர்த்த முடி​யா​மல் போகி​றது.​
பெரம்​ப​லூர்,​​ அரி​ய​லூர் பகுதி புவி​யின் தோற்​றத்​தைப் பற்​றி​யும் பல்​வேறு உயி​ரி​னங்​கள் பற்​றி​யும் ஆய்வு மேற்​கொள்​ளத்​தக்க வகை​யில் காலக் கரு​வூ​ல​மாக இந்​தக் கல்​ம​ரங்​கள் இருக்​கின்​றன '' என்​றார் இர​மேசு கருப்​பையா.

-​நீதி​செங்​கோட்​டை​யன்
"ஜீன காஞ்சி"-சமண காஞ்சி -திருப்பருத்திகுன்றம் ,காஞ்சி."தச்சூர்.திரு மூக்கன் அய்யா அவர்கள். 'நாங்கூர் காடு'காவலர்.திட்டக்குடி வட்டம்,கடலூர் மாவட்டம்நான் செத்தாக்க என்னை தூக்கி போட வருவியா.............."இறந்தோருக்கு பசுமையில் ஒரு தாசு மகால்" . இவர்களே மனிதர்கள்.சமச்சீர் கல்வி-.''பிரின்ஸ் கசேந்திர பாபு''தோழர் தியாகுவின் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி.....கல்மரங்கள்யானை பற்றிய சில கேள்விகள் ..

Report "இலுப்பைத்தோப்பு"

Are you sure you want to report this post for ?

Cancel
×